இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாலுகா ஆபீஸ் குமாஸ்தா வேலை!
ஓதிப் பற்பல உயர்ந்து தாசிலாய்
நீதி புரிந்த : நெல்லை யப்பன்
தருவித் தென்னைத் தாலுகா விடத்தினை
மருவிக் கிளார்க்கா வரைந்திடச் சொல்லினன்.
தந்தை அவன் சொல் தட்டமாட் டாமல்
அந்த வேலையில் அமர்ந்திடச் செய்தனன்.
சிலநாள் பார்த்ததைத் தீர்த்துப் பின்னர்,
நலமா வீட்டினை நண்ணி யிருந்தேன் !
தந்தை அடிக்கடி தக்கன சொல்லியென்
சிந்தையைத் திருப்பித் திரிச்சிக் கேகி
- நடுவினைத் திறக்கும் நன்னிலைக் கல்வியைக்
கடிதினிற் கல்லெனக் கட்டளை யிட டனன்
1 நெல்லையப்பன்— தாசில் நெல்லையப்ப பிள்ளை,
1 திருச்சி— திருச்சிராப்பன்னி.
- நடுவினை— சீதியை.
16