பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சட்டப் படிப்பு.

எந்நகர் தன்னினும் ஏற்றம் மிகுந்த
அந்நகர் அடைந்தியான் ஆண்டார் வீதியைப்
பொருந்திச் சிலநாள், பொற்புறு வசந்தன்
திருந்திய தெருவினைச் சேர்ந்து சிலநாள்,
தங்கியங் கிருந்த + சட்ட வகுப்பினுட்
பொங்கிய உவகையிற் புகுந்தங் கமர்ந்த
கருணை நிறைந்த கமாபதி யையன்,
அரிகா மய்யன் ஆதியோர் தம்பால்
சட்டம் பலவும் சரியாக் கேட்டு
விட்டவை சும்மா வீணாட் கழிக்கத்
துணிந்தேன். அந்நாள் தூயவென் தந்தை
அணிந்துரை எழுதி “ஐயா, நீ இது
பார்த்த வுடனே பயணப் பட்டுச்
சேர்த்தி என்னுயிர் சீக்கிரம்" என்றான்.
படித்ததும் அதனைப் பயணம் செய்து
முடித்து விடியு முன்னரென் தந்தையைக்
கண்டேன் ; அவனெனைக் கட்டி முத்தினன்.
உண்டேன் அவனுடன்; உவந்தவன் தங்கிப்
படித்தேன்; வந்த பரீட்சையிற் றேறினேன்.
படித்தநாள் நிகழ்ந்தன பகர்வேன் இனியே.

 

tசட்ட வகுப்பு-Law class. 2

17