பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிதம்பரச் சிறுவனுக்குச் சங்கடம்!

இந்த நாளையில் என்சிறிய அத்தை
வந்தனள் கொழுநன் வான்செல என்னிலம்.
பெரிய அத்தை பெரு முத்து சாமியை
உரிய மகனா வுடன்கொண் டேகினள்.
சின்ன; சுப் பையனைத் தினமும் ஊட்டி
என்னினும் அவாவி எழிலுற வளர்த்தேன்.
தமக்கையும் தாயும் சார்ந்தவர் தம்மொடு
நுமக்கிங் கென்னென நொடியினில் ஆயிரம்
சண்டை தொடுப்பர்; தடுத்ததை நிறுத்திப்
பண்டை யுரிமையைப் பகர்வேன்; அந்நாள்
மிகுசெல விட்டு விவாகம் நடாத்தித்
தகுதியில் , கணவனை யென் தமக்கைக் களித்தென்
வீட்டுடன் இருக்க விளம்பினன் தந்தை. யான்
காட்டினிற் சென்றிடுங் கதியினை அடைந்தேன்.
பொறாமை மேற்கொடு புறத்திருந் துற்றவன்
அரும்பல பழிகளை ஆக்கிக் கூறுவன்.
தந்தை என்னைத் தாறுமா றாக
நிந்தை புரிந்து நினைத்தற் கரிதா
அடிப்பன்; மிதிப்பன், யானுடன் ஓட்டம்
பிடிப்பன். அவன் பின்றொடர்ந்து கொணர்வன்.

 

- முத்துசாமி —நல்ல முத்துசுவாமிப் பிள்ளை.

சுப்பையன் — சுப்பிரமணிய பிள்ளை. கணவன் — கணவனாகிய முத்துகுமாரசாமிப் பிள்ளை.

20