பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

துறவு கொண்ட சிதம்பரம்!

எண்ணிலாத் தடவை இப்படி நேர்ந்தன.
கண்ணிலா தொருநாள் கணக்கிலா தடித்தான்.
நினைந்தேன் துறவினை: நீக்கினேன் சிகையினை.
புனைந்தேன் கௌபீனம்; பொள்ளென நடந்தேன்.
கண்ணினேன் மதுரையை நாளிரண்டுக் குள்ளே.
எண்ணினேன் துறவினை இடையிற் று றந்திட:
எழுதினேன் என்னூர் இட்டனொரு வற்கு
விழுமிய காசி விசுவ நாதரைக்
கண்டு வணங்கக் கடிதினிற் செல்வதா.
கொண்டதும் அவனதைக் கொடுத்தனன் என்னைப்
பலவூர் தேடிப் பயன்படா துழந்து.
நலமெலாம் விடுத்து சைவுறுந் தந்தையால்.

 

21