உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெட்டும் பட்டணம் சேர்.'

சின்னாட் சென்றிட ஜெலால்கான் என்னும்
பன்னாட் சிலம்பினைப் பயிற்றுவித் தவனை
அழைத்துக் கொண்டியான் அறியா தெவரும்
தழைத்து நிற்குந் தலைநக ராகிய
சென்னைப் பட்டினம் சென்றேன். அங்குவந்
தென்னுயர் தந்தை எம்மையூர் கொணர்ந்தனன்.
திருமதி திசநகர் சேர்ந்து கற்கையில்
ஒருவன் சொல்லினை உவந்துட் கொண்டு
சென்னை மறுபடி சென்றேன்; எழுதியங்
கென்னைத் திருப்பினன் இணையிலென் தந்தை.
அளகையில் ‘கிளார்க்'கின் அலுவலை விட்டபின்
வளமெலாம் நிறைந்து மாண்பெலாம் எய்திச்
சீரினைக் கொண்ட திருவனந் தபுரம்
ஓரிர வுறங்கையில் ஒளித்துச் சென்றேன்.
பிதாவங் கெழுதிப் பின்னரும் திருப்பினன்.
சதாவும் இப்படித் தலம்பல சென்றும்
தந்தையின் வரவால் தக்கநன் முயற்சியால்
சிந்தை திரும்பத் திரும்பி வந்தும்
கெடுவன புரிந்தேன்; கிளர்ச்சியொடு நின்று
[1]நடுவினைப் புரிந்த நன்னிலை பகர்வனே.


  1. நடுவினை-வக்கீல் தொழில்.

23