வக்கீல் தொழிலில் வல்லமை.
நீதித் தலத்தில் நிதம்வரும் கேஸ்களில்
பாதி எனக்குப் பலித்தத் தந்தையும்
பிதாவும் அறிவுயர் பெரிய தந்தையும்
உதார மொடுபுகழ் ஓங்கநின் றதனால்,
தெய்வநற் கிருபை சேர்ந்துநின் றதனால்,
செய்வ தெதனையும் திருந்தயான் செய்ததால்,
எடுத்த கட்சியை இடையில் விடாது
தொடுத்து நடாத்தும் துணிவினைக் கொண்டதால்
வந்தவ ரிடத்து மதுர மாகவும்
சொந்தம தாகவும் சொல்லுரைத் ததனால்,
உடையும் தோற்றமும் உயரக் கொண்டதால்,
கொடையும் குணமும் குலவுறச் செய்ததால்,
கொண்டவன் எதிரியைக் குவலயம் கலங்கினும்
அண்டம் கலங்கினும் அணுக வீடாததால்,
● எளியவர் வழக்கினை ஏற்றிடா மற்பொருள்
களியொடு நடாத்திய கருணை யதனால்,
நீ பதியின் நெஞ்சம் திரும்பிட
ஓதி வழக்கினை உணரச் செய்ததால்,
கமிஷன் என்றிடும் கைக்கூலி கொடுத்தல்,
அமிசம் அன்றென அறவிடுத் ததனால்,
கொண்டவன் கட்சி குலைந்திடக் கண்டால்
அண்டி எதிரியை அணைத்துப் பேசி
இராஜி செய்தும், இடையில் நிறுத்தியும்
வராது தோல்வியை மனத்தொடு காத்துப்
பத்தினி லாறு சித்திய தாகவும்
ஒத்தன மூன்றும் [1] செத்த தோன்றுமாப்
பிடித்த வழக்கினை முடித்துநின் றதனால்,
அடுத்த வழக்கினர் தொடுத்து வந்தனர்.
- ↑ *செத்தது-தோற்றது.
25