பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

போலீஸாரின் சூழ்ச்சி.



போலீஸ் என்னும் பொய்நிறை பேடியர்
தாலி இழந்திடத் தம்மூர் சென்றிட
[1]வினாவெனும் கோல்கொடு வெருட்டி அடித்ததால்,
கனாவினும் எனையவர் கண்டுகொண் டிருந்து
துட்ட [2]ஹேட்டாகிய சுப்பிர மணியனைச்
சுட்ட தாகத் தொடங்கிய வழக்கில்
எதிரிகள் என்னுடன் எண்ணிச் சதிதான்
புரிந்த தாகப் பொய்மிமோ [3] எழுதி
அன்னார் தமக்குநான் ஆஜரா காமல்
பின்னே போயிடப் பேச்சுறுதி வேண்டினர்.
சமையம் அறிந்துயான் சரியெனக் கூறி
அமையம் வந்தபோ தாஜராய் நின்றேன்.
சாட்சியை உலைத்திடும் தகாச்செயல் செய்ததா
ஹேட்டொரு பிரியா தென்னொடு சிலர்மேல்
நடத்தினன். அவனை நஷ்டியெங் கட்குக்
கொடுத்திடத் தீர்ப்புக் கூறினன் [4] வைபாட்டு
சுட்ட வழக்குத் தொலைந்தது பொய்யென :
விட்டனன் ஹேட்டு வேலையை அவன்தான்.
அதற்குப் பின்னர் அடங்கினர் போலீஸார்.
எதற்கும் என்னை எதிர்த்திடத் துணிந்திலர்.


  1. வினா-குறுக்கு விசாரணை.
  2. ஹேட்சுப்பிரமணியன்–ஹெட்கான்ஸ்டபின் சுப்பிரமணியபிள்ளை
  3. மிமோ-Memo.
  4. வைபர்ட்டு- தூற்றுக்குடி ஜாயின்ட் மாஜிஸ்டிரேட் மிஸ்டர்
    லயோனல் வைபர்ட்டு.

26