பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆதியில் ஒன்றும் அந்தத் தொன்றும்
ஓதி நிறுத்துவேன் உன்பொருட் டாக.
முடிமனில் என்னுடை முன்னோர் நாள்முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை
ஏதமில் லாமலே எண்ணிலா வழக்கில் [னேன்.
அமிழ்த்தினர் போலிஸார் ; அனைத்தினும் திருப்பி
தமிழ்த்துறை உணர்ந்து - தம்பிரா னான
ஆறுமுகம் பிள்ளை ஆசாரி யொருவனைக்
கோறுதல் புரிந்ததாக் கொணர்ந்த வழக்கினில்
அவனைத் திருப்பினேன். அறத்தொடு நிற்குமென்
தவமனை மகவியல் சாற்றுவன் இனியே.

 

முடிமன்- ஒட்டப்பிடாரத்திற் கருகிலுள்ள சிற்றூர்.

t ஆறுமுகத் தம்பிரான்- திருவாவடுதுறை மடத்தில் தம்பிரானாக இருந்து காலம் சென்றவர்.

28