பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவே வடிவமா அமைந்திவண் நின்று
செறிவுறும் இன்பம் சிறக்க அளிக்கும்
வள்ளிநா யகமொடும் மற்றும் மறைகளைத்
தெள்ளிய வுணர்ந்த திறத்தின ரொடும்யான்
பிரம நிலையினைப் பேசி விசாரணை
புரியுங் காலையில் புறத்தினில் நின்று
சொன்னவை யெல்லாந் துரிசறக் கேட்டுப்
பின்னவை யென்னொடு பெட்புறச் சொல்லுவள்.
பலருடன் அமர்ந்து பருகும் பொழுதப்
பலரும் அறியாப் பதத்திலும் மறைத்தும்
நானும் வள்ளி கசாகரம் நவில்வன
தானும் உணர்ந்து தனக்குள் நகுவன்.
சிவப்பொருள் உணர்ந்த + தேசிகர் ஒருவனென்
தவப்பய னால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினைத் தவிர்த்திட ஊட்டினள்.
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்.


வள்ளிசாயகம்-வள்ளிகாயக சுவாமியார்.
1 தேசிகன்-விருதாகர் ஸ்ரீ சாமய்யா தேசிகர்.
30


30