பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மன முந்திரி

கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதியான் உரமில் லாமையால்

  • அவளிடத்' துரைத்திட. அடுக்களை சென்றேன்.

அவளெனைக் கண்டதும் அறைந்திடு முன்யான்

  • எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!

எல்லாம் கடவுளா யிருக்கக் கண்டும்,
உருவம் முதலிய ஒன்றனும் பேதம்
மருவுத லிலாமை மலைபோல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்.
அன்றியும், இஃதெலாம் ஆதியில் நினைத்தே
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலகப் பேதைமை உணர்ந்தோர்.
பழைமைபா ராட்டிப் பகுத்துப் பிரித்தல்
கன்றே? நல்லோய்! ஈவிலுவார் நவிலுக!
என்றும் போலவன் இருக்கட்டும். " என்றனள்.
திருமதி தீரநகர் சேர்ந்தபின் என்குல
குருவந் தனனெக் கூறி அவற்குறும்
தட்சணை நிதியைத் தந்தனள் ; யானும்
பட்ச முடனவன் பக்கம் சென்றேன் :
செலவின் விவரம் தெரிய வினவினேன்.
பலவிவ காரம் பலத்தன, அவன் எனை
“ சீடன் அலை எனச் செப்பினான்-யானும்
வீடுடன் வந்தேன் ; விளம்பினேன். " அந்தோ !

31