பதிப்புரை
ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல் ஓட்டினாய் -- பொருள் ஈட்டினாய்! - கேட்டவன் : ஒரு ஐ.ஏ.எஸ். கலைக்டர். வெள்ளையன்.
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ?-- நாங்கள்-சாகவோ?-பதிலளித்தவன் : தமிழன், தேசபந்தன், வ. உ. சிதம்பாம் பிள்ளை.
இது முப்பது வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.
"வென்ளையனே வெளியே போ"என்று நாம் இன்று கூறுகிறோம். தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை இதே குரலை முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுப்பினார்.
அவர் தீர்க்கதரிசியான தேசபந்தர்.
சாவகத்திலும், சுவர்ண பூமியிலும் சென்று தமிழ்க் கொடி நாட்டிய பண்டைப் பெருமைகளைப் பேசி காலத்தைக் கரைத்த வர்க்கமல்ல அவர். கொள்ளை போகும் சொத்துக்களைத் தடுக்க, வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் ஓட்டியவர். பிறநாட்டார் 'நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து நம் அருள் வேண்ட வேண்டும் ' என்று கனாக்கண்டவர். அவருடைய சுதேசிக் கப்பல் வியாபாரத்துக்கு மட்டும் கட்டப்பட்டதல்ல; வெள்ளையானை நாடு கடத்த, வெளியேற்ற, அவன் ஆதிக்கத்தைக் கப்பலேற்றப் படைத்த சாதனம், அது.
கப்பலோட்டிய தமிழர், அவர்.