பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நடையுடை கண்டு நயப்பேன் மகிழ்வேன்.
வள்ளிநா யகம் எனும் மாணிறை துறவியால்
தெள்ளிய பற்பல சிறப்பு றக் கேட்டேன் ;
உயிரெனும் ஒருத்தி உரிமைச் சரிதையை
செயிரென வைத்தல் தீயினில் இட்டேன்:
கைவல் லியப்படக் கருத்தொடு கற்றேன்
கைவல் லியமெனும் கருத்துயர் நூலும்
விசாரசா காமும் வேறொரு சிலவும்,
விசாரம் புரிந்து மெய்ப்பொருள் கண்டு
துன்பமும் இன்பமும் துலையெனக் காணும்
நன்பதம் தெரிந்தேன்; நன்கதில் நின்றிலேன்.

 

37