உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தம்பரத்தின் சிறந்த பத்திரிகை


விவேக பாநு விளங்குற எங்கும்

  • “விவேக பாநு”வை வெளிவரச் செய்தேன்:

உண்முகம் நோக்கும் உபாயம் தெரிந்தேன்:
+ சண்முகம் பிள்ளையின் தகுகட் புற்றேன்
சுருக்கி யுரைத்தலை, சொல்லுவ கேட்டலைப்
பெருக்கி அறிவுறும் பெற்றியைக் கொண்டேன்,
ஊழின் வலியால் உறாது துறவினைப்
பாழின் சிறுமைப் படுகடல் ஆழ்ந்தேன்:
சதாவும் பானடி தழைக்கத் தொழுவேன்.
சுதேசியம் வளர்த்ததைச் சொல்லுவேன் இனியே.


*‘விவேகபாநு’- நூலாசிரியர் நடத்திய தமிழ் மாத சஞ்சிகை.

†சண்முகம் பிள்ளை -பாளையங்கோட்டை சண்முகம் பிள்ளை.

38