சுதேசியம் வளர்த்தமை.
என்னுடற் பற்றினை இணையறக் கொண்டதால்,
என்னுடை மனைமுதல் இணைவுறக்கொண்டேன்;
புகழினில் விருப்பம் பொருந்திட நேர்ந்தேன்;
அகமதை அகற்றி அன்பினை வளர்த்தேன்:
சைவசித் தாந்த சபையினுட் புகுந்து
கைவரக் கொண்டேன் கருத்தினி துரைத்தலை:
மதுரைத் தமிழ்ச்சங்கம் மருவி நின்று
மதுரத் தமிழினை மனங்கொடு வளர்த்தேன்.
வாலிபர் சங்கம், மாண்பிரம சங்கம்
நாலைந்து மற்றவை நயத்தொடு சேர்ந்தேன்
பிரசங்கங் கேட்டேன்; பேசினேன் யானும்:
பிரசங்கி என்றொரு பெயரும் கொண்டேன்.
எத்திசைச் செய்தியும் எளிதினிற் றெரிந்திடப்
'பத்திரிகை யொருசில பார்த்தேன்; அவற்றால்
தெரிந்தநற் செய்திகள் செப்பினேன் பிறர்க்கு.
பரிந்துநன் கெவர்க்கும் படித்தன பகர்ந்தேன்:
முன்மனை மீது முத்து சுவாமி
நன்மனங் கொண்டு நவின்ற வெண்பா
உணர்ந்தவை போல உரைக்க முயன்று
கொணர்ந்தேன் சிலகவி கூறிய வழியில்.
அன்பன் கந்த சுவாமி ஐயனும்
முன்பு சொன்ன முத்து சுவாமியும்
திருத்தி யவற்றைச் செப்பிடச் சந்தம்
பொருத்த மாகப் புகன்று சிலபின்
நுாலாசிரியர் மைத்துனர் முடிமன் முத்துசுவாமிப்பிள்ளை.
30.
39