உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உலகம் மாயையா...?




அன்பறி விங்ஙனம் ஆக்கியான் வருகையில்
என்பெரிய அத்தையோ டேகினேன் சென்னை.
[1]இராம கிருட்டினா னந்தனைக் கண்டேன்.
“தராதலம் பரவிச் சாரும் சுதேசியக் [வும்,
கைத்தொழில் வளர்க்கவும், கைத்தொழில் கொள்ள
எத்தகை முயற்சி இயற்றினை” என்றான்.
“கனவினை நிகர்த்துக் காணுமிவ் வுலகின்
நினைவினைக் கொண்டென்? நீள்வினை யாற்றியென்?
கீழ்கோ டுயர்ந்தென்? மேல்கோ டுயர்ந்தென்?
வாழ்வோ தாழ்வோ மாய்கையே!” என்றேன்.
“சுதேசியம் ஒன்றே சுகம்பல அளிக்கும்
இதேஎன் கடைப்பிடி” என்றனன். அவனுரை

  • வித்தென விழுந்தது மெல்லிய என்னுளம்:

சித்தம் அதனைச் சிதையாது வைத்தது:
அடுத்தகாரத் திகையில்; [2]அருணம் செல்வழி
அடுத்தனர் இருவர் அருணிறை வங்கர்
மேகமும் மின்னலும் விழைதர வந்தபோல்.
பாக அவியினைப் பண்பொடு நல்கினேன்;
சுதேசியம் [3]*வங்கம் தோன்றி வளர்வதன்
இதோப தேச இன்மழை பொழிந்தனர்.


  1. †இராமகிருட்டிணானந்தர் - விவேகானந்தர் மடத்தைச்சேர்ந்த ராம
    கிருஷ்ணானந்தர்.
  2. அருணம் - ஜப்பான் தேசம்.
  3. வங்கம் - வங்காள தேசம்.

41