“வந்தேமாதரம் ; வாழ்க, சுதேசியம்!
தூற்றுக் குடிகைத் தொழில்வளர் சங்கம்
சாற்றுதற் கரிய தரும சங்கம்
எனவிரண் டிலைகொண் டெழுந்ததவ் வித்து.
தினமச் செடியினை சிந்தைகொடு நோக்கி, :
“வொந்தே மாதரம், "வாழ்க சுதேசியம்,
“சொந்தத் தேசம் சுகம்பெற ” என்னும்
மனைதொறும் கண்ட மாண்புயர் சொற்களின்
வனையருங் கால்கள் வலைசிகள் கயிறோடு
வேலி பிடித்து வேறுளம் கொண்ட
போலிச் சுதேசியாம் பொய்யுரை மிருகம்:
நெருங்கிட விடாது நினைவொடு காத்து,
நெருங்கிய நண்பரை நிதமும் சேர்த்து,
தர்க்க மென்னும் தகுமண் வெட்டியால்
வர்க்கப் பாத்தி வரிசையாச் செய்து,
ஜகத்தினை என்றும் தன்வசப் படுத்தும்
அகத்தின் கேணியின் அருளின் நீரை
நாவானும் துலாவால் நாளும் இறைத்து,
'தா 'எனும் இன்சொலின் தகளியால் வார்த்துப்
பலபல சங்கக் கிளையுடன் அச்செடி
வலினிதம் பெற்றிட மதிகொடு வளர்த்தேன்.
வானில் ஒளிரும் மதியென விளங்கி
வானுறத் திசையுற வளர்ந்து பரந்து,
தபோதன ராகித் தாரணி அளிக்கும்
t மனைதொறும் - வீடுதோறும் (எழுதப்பட்டிருக்க)
.
42