பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாவாய்ச் சங்க நன்மலர் அந்நாள் "வாவா" என்றிட மனத்தொடு சென்றேன். மனையாள் தலையணை மந்திரம் ஜபித்தென் தனநீ றடிக்கடி தந்ததால் : முன்மலர் வாடா திருந்தது வளப்பமில் லதனைக் கோடாகத் தாங்கிய 3 கோவில் பிள்ளைபால் கடன்சிலர் வாங்கிக் கறையான் போலதன் திடன்சிதை வுற்றிடச் செய்தனர் அந்நாள்

  • மேற்றிசை யாரின் வெங்கனற் காற்று

நாற்றிசை சென்றென் னகரினுட் புகுந்து செடியின் வேரெனத் திகழ்ந்த என்னை நொடியின் பிரித்தது. நுண்ணறி வுடைய கந்த சுவாமியும் கருணை 33வை குண்டமும் தந்தனச் சாமியாற் சார்ந்தபேய் மொழியையும் கறையான் அரிப்பையும் கடிதினிற் போக்கி நிறைவான் மதியின் நிலைத்தூண் : கொடுத்து நண்பர் பொருளின் நல்லெரு விட்டுக் கண்பார்த் தென்றும் காக்க அம்மலர் பெரிய இலாபப் பெருங்கனி நல்கும் அரியாற் பிஞ்சினை அளித்துள திந்நாள். நாவாய் தருவித்து நாளும் நடாத்திக் காவா நிற்பதாக் கழறிய ** நல்ல

நாவாய்ச் சங்கம்- கப்பல் கம்பெனி. முன் மலர்-நெசவுச்சாலை. 3 உடையார்குளம்-கோவில்பிள்ளை நாடார் மேற்றிசையார்-மேல்நாட்டினர். கொடுஞ் செயல்கள். 11 கந்தசாமி-தேசாபிமானத்தால் பெருவருவாயுமுள்ள போர்ட்டா பீஸ் உத்தியோகத்தை விடுத்துத் தேசத்திற்காக உழைத்த எஸ். கந்தசாமிப் பிள்ளை, 38 வைகுண்டம் வக்கீல் குமாஸ்தா வைகுண்டம் பிள்ளை.

  • சிவபுரம் மிட்டாதார் சி. வ. நல்ல பெருமாள் பிள்ளை".