பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருமாள் பிள்ளை தன் பெருங்கடை. நின்ற வருவாய் பார்க்கும் மனவலி கொண்ட 1 ஜோஸப் லூயிஸ் மோத்தா தன்னைப் பாசப் பரப்பால் பம்பாய்க் கனுப்பினன். பெருமிரு மாதம் பேணி வுழைத்தவன் தருவதாச் சொல்லிய “ ஷாலயன் கப்பலின் சொந்தக் காரன் சொல்லினை மாறித் தந்திடேன் என்று சாற்றிய தாக வரைந்தான்.ஐயோ!வணிகர் பலரும் கரைந்து மெலிந்து கண்டனர் என்னை.

  • ஆதியைத் தொழுவோம் ; அவனருள் இலாமல்

ஏதிவண் நடப்ப" தென்றவர்க் குரைத்தேன். தொழுதனர் யாவரும் சுப்பிரமணியனை விழுமிய மூல மெய்ப்பொருள் தொழுதியான் தந்தி எழுதி “ஷாலயன் " காரற் கந்தி பகலா அடித்துச் சிலநாள் இலாப ஆசையை எழுப்பினேன் அவனுளம் பலாவின் கனியின் பண்புறு சொல்லால் ஏஜெண் டொருவனை என்னகர் அனுப்பி “வாசகப் படிநீ வரைந்துடன் படிக்கை விரைவில் அனுப் "பென விளம்பினன் தந்தி. தரைவழி வந்தனன் சாற்றிய ஏஜண்டு. அன்னோன் வந்ததும் ஆசை மிகுந்த பொன்னோர் சிலரும் புகன்ற நல்ல பெருமாள் பிள்ளையும் பின்கால் வாங்கினர். 1 புரோக்கர்-ஜே. எல். மோத்தா.


46