பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

வாக்கின் வலியால் வசப்படச் செய்தியான்
வணிகர் பலரையும் வருத்தி அவணிலம்
துணிவொடு "சுதேசிய நாவாய்ச் சங்க"
நன்மலர் கண்டேன். நான்கில் ஒன்றுக்குப்
பொன்மலர் தருவதாப் புகன்றனன் பக்கிரி
பிறகு தாந்தாம் பெருந்தொகை தருவதா
அறைந்தனர் யாவரும் அளித்தனர் ஒப்பம்.
“கப்பல் ஒன்றனைக் கடிதில் வருத்" தென்று
செப்பிட உலகெலாம் செலுத்தினேன் தந்தியை
கொழும்பிருந் தொன்றனைக் கொணர்ந்தேன்
                 [* 'சார்ட்டரில்
எழும்பிய பணமெலாம் இழுத்ததக் கப்பல்.
பார்த்தான் கணக்கை ; பயந்தான் பக்கிரி
ஆர்த்தான் ; இடித்தேன் அழுதான் ; படுத்தான்.
பெயரினை நல்கிப் பின்னரும் சிலதினம்
செயலினை முடித்தபின் திரும்பக் கொள்ளென்று
சங்கத்தை ரிஜிஸ்டரில் தாக்கல் செய்து
பங்கமறக் கடன் கொடு பம்பாய் சென்றேன்.
கனநாள் விழித்துக் "காலியா" லாவோ"
தனநான் தருவதாச் சாற்றிக் கொணர்ந்தேன்
நாவாய் நடந்து நன்மணம் பரவவும்
பேவாய் மொழியும் பீயைஸன் கம்பெனித்
திருடனும் சேர்ந்து தெரியாது மறைந்து
பொருடரு வாரின் பூவின் கிளையைக்
கொன்று கொண்டிடக் கூடிய வெல்லாம்
நின்று புரிந்தனர் நீளொரு வருடம்.
சார்ட்டர்-Charter-வாடகைக்குக் கப்பலைப் பெறுவதற்கான
பத்திரம்.
- பேவாய்மொழி-லாபம் தருமோ?எனப்
பயந்து
கூறிய
மொழிகள்.

50

 

50