பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினத்தொரு சந்தித் தெருவினிற் சென்றியான் மனத்தொடு பிரசங்க மந்திரம் சொல்லி ஏழைகள் துணையாம் இன்மண் கொண்டு “பாழாய்ப் போகப் பதரிடச் செய்த பிசா" செனும் உரையொடு பிறவும் கூட்டி அசைவின்மை யென்னும் * அக்கினி யிட்டும், மூலை முடுக்கில் மொய்யிருளகல வேலை யாட்களின் விளக்கிட்டும் பேய்மொழியும் திருடனும் அணுகாத் திறத்தொடும் காத்தேன்.


பிணியுற்று குழந்தைகள் பிணியினின்றும் நீக்கவேண்டி முச்சந்தி மண்ணெடுத்து வந்து மிளகாய் வற்றல் முதலியவற்றைக் கூட்டி அக்கினியில் இடும் தமிழ் நாட்டு வழக்கு ஈண்டுக்

குறிக்கப்பட்டுளது.


51