உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மவர் இழைத்த அநீதிகள்.


பொருடந்த சிற்சிலர் பொறாமைமேற் கொளீஇ நம்மில் எளியன் நம்மிற் சிறியன் தம்மினும் புகழினை நண்ணுதல் என்னோ? அவனை ஒழித்தெலாம் ஆள்வேம்" என்றே எமனவர் போல என்மேல் வந்தனர். பண்டக சாலைப் பருவ மலரைக் கொண்டு காவெனக் கூறினேன் என்னரும் அறிவென உயிரென ஐம்பொறி யாமெனச் செறிவொடு நிற்குமென் சிநேகிதனான வெங்கிட்ட பரம நாயகன் தன்பால், “இங்கெட்டி வந்ததென் ஈறிலா முயற்சியோய்! எழுத்தொன் றெழுதினால் ஏற்கேனோ' என்றான், வழுத்தி அவன் குடி. வாழ்க பெருகியெனப் பண்டக சாலைப் பாத்தியம் கொடுத்தேன். கண்டெனக் கனி தரும் காய்காத் துளதின்று எமனவர் நாவாய்க் கிருநிதி வேண்டும் ; நுமருடன் சென்று கொணரும் நிதி எனக் கள்ளிக்கோட்டைக்கெனை மெள்ள அனுப்பினர். மெல்ல அவருள வெளிச்சம் தெரிந்தேன். பின்னர் எமனவர் பேச்சால் எழுத்தால் என்னை “ அவண்போ ; இவண்போ,' என்றனர். இத்தகையவருட னிருத்தல் என்னுயிர் ஒத்தநா வாய்மலர்க் கூறாம் என்று வடதிசை பலநகர் மகிழ்வுடன் சென்று, குடதிசை வந்து கூடினேன் என்னகர்.

நெல்லை வக்கீல் குருசாமி ஐயர் முதலியோர்.


52