பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மீண்டும் கப்பல் கம்பெனியில்...!


"அவனையாம் நீக்கிலேம் : அவனே நீங்கினன் :
அவனைத் திருப்பி அழைத்துக் கொள்வோம்"
என்றெனை அழைத்து" நீ ஏஜண்" டென்றார்.
நன்றென மொழிந்தேன் நாணம் விடுத்தே!
அவரில் ஒருவன், "ஆ ! ஆ !, அப்பெயர்
தவலரும் புகழைத் தருமே இன்னமும் ;
சூப்பரிண் டெண்டெனச் சொல்லுவோம் " என்றான்.
காப்பதெப் பெயரொடும் கடனெனக் கொண்டேன்.
திறத்துடன் * பீயைச் சேர்ந்தவர்த் திருப்பினேன்.
மறத் துடன் ஆள்வோர் வன்செயல் மொழிவனே.பீயைச் சேர்ந்தவர்-பி. ஐ. எஸ். என். கம்பெனியைச் சேர்ந்த
வியாபாரிகள்,

 

54