பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

வ. உ. சிதம்பரம் பிள்ளை தற்சரிதம். (தோற்றுவாய்)

 

பூவுல கதனைப் பொருந்தி நின்று
தேவுல கதனிற் சிறந்த வுலகின்
நினைவொடு நிற்கும் [1]நெல்லை யப்பநீ
கனிவொடு கேட்டவென் கதைக்குறிப் பிஃதே:

நாட்டுச் சிறப்பு.



ஏழ்பெருங் கடல்சூழ் ஏழ்பெருந் தீவினில்
வாழ்பெருந் தீவென மாண்டோர் உரைத்திடத்
திருமகள் என்றும் சித்தம் மகிழ்ந்தவள்
மருமகள் தன்னொடு மருவி உறையும்,
வாய்ந்தநன் மலைகளும் வருமிரு புனல்களும்,
ஆய்ந்தநன் னகர்களும் அழகிய வனங்களும்,
பெரும்பொருள் யாவும் பெட்பன பலவும்,
அரும்பொருள் யாவும் ஆலயம் பலவும்,
தக்க விளையுளும் தாழ்விலாச் செல்வரும்,
தக்கார் பலரும் தவத்தினர் பலரும்,
பொறைவருங் காலம் பொறுத்தும் இறைவற்
கிறைதனை எளிதில் இறுக்கும் குடிகளும்,
காவலும் நன்மையுங் கல்வியும் நிறைந்துள
[2] நாவலந் தீவெனும் நற்பெருங் கண்டத்துச்
சரதமு மின்பந் தழைக்கச் சுரந்திடும்
[3]. பரதகண் டத்துப் பாரிய தேயத்து,


  1. நெல்லையப்பர்-சென்னை லோகோபகாரி” மாஜி பத்திராதிபர்
    பரவி-சு, நெல்லையப்ப பிள்ளை.
  2. † நாவலந் தீவு - ஆசியாக்கண்டம்.
  3. + பரத கண்டம் - இந்திய தேசம்