பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வெள்ளையர் வெருண்டனர் !


திருமந் திரநகர் சேர்ந்த வெள்ளையர்
பெருமந் திரவா லோசனை செய்தனர்
P (கோரல் மீல்லின் கூலி யாட்கள்
"வார தில்லை ; வயிற்றினி லென்றும்
அடிப்பத னாலும் அளவறத் துன்பம்
தடிப்பதனாலும் சம்பளங் கூட்டித்
துன்பம் நீப்பின் தொடருவோம்." என்று
பின்பகல் நின்றனர் : பெருமிடி யுற்றனர்.
சினேகித ரிடத்துச் செப்பினேன். அவரும்
அநேக ரிடத்து அரும்பொருள் பெற்றுப்
பெய்தற் கரிய பெருமழை போன்று
செய்தற் கரிய செய்தவர்க் காத்தனர்
சிலநாள் முன்னர்ச் சென்னை ஜன சங்கத்தின்

  • பலமான கிளையெனப் பகரத் தக்கதா

நூற்றுக் குடியின் சுதேசிகட் குள் ளே
தோற்றக் கூடிய சொல்லரு வழக்கில்
சமாதான மாகத் தக்கன வற்றை
எமாலாம் பஞ்சாயத் திருக்கவும், ஆங்கு
கைத்தொழில் அனேகம் கற்பிக்கத் தக்க
கைத்தொழிற் பள்ளி கடிதினில் அமைக்கவும்,
ஜனங்கள் வருந்திச் சம்பாதித் துள்ள
தனங்கள் யாவையும் தாங்களேற் படுத்தும்
காவலைக் கொண்டு காத்து வரவும்,

  • கோரல் மில்- தூற்றுக்குடியில் உள்ள கோரல் மில்ஸ். எ அன்டு எப்

ஹார்வி மில் என்றும் வழங்கப்படும்.
57

 

57