பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

போலீஸ் பயமுறுத்தலும் - தோல்வியும்.
உடனே எழுந்தேன் “உத்தம நண்பரே!
திடனோடிருந்து செப்புவ கேண்மின்;
சத்தம் மிகுந்தால் தாக்குவர் போலீஸார்:
மெத்த விளையும் விரும்பாத” என்றவர்க்
உரைத்தவுடன் கீழ் உட்கார்ந்த அனைவரும்
உரைத்தன எல்லாம் உவப்பொடு கேட்டனர்.
பின்புநான் எழுந்தேன், பேச எழுந்த
முன்பு [1]டிரிலை முடித்து நின்ற
வயிரவர் வெடியொடு மயங்கி விழித்தனர்.
“அயிரன்மின்! நான் இவனை அறைந்திட வந்திலேன்:
உத்தம வழிப்பனோ? உம்முரை கடப்பேனோ?
சித்தம் மயங்கித் திகையன்மின்” என்று,
குழுவினைப் பார்த்துக் “கூறிய தெல்லாம்
பழுதறக் கேட்டீர்; பண்பொடு நின்றீர்:
சாற்றிய தரும சாலையில் இனிமேல்
நேற்றுப் பேசிய நீயும் நானும்
சுதேசியம் சிற்சில சொல்லுவோம்: வருக.
இதேவழி” என்று நான் எட்டி நடந்தேன்.
வந்தனர் அனைவரும்; வந்த சில போலீஸார்.
வந்தனர் என பின் தனக்கென வஞ்சினம்
மறுதினம் [2]"பள்ளி வாசற் பேட்டையில்
செறிவுறப் பிரசங்கம் செய்வர் இருவரும்.”


  1. டிரில்-கவாத்து.
  2. பள்ளிவாசற்பேட்டை - தூத்துக்குடி பள்ளிவாசலைச் சேர்ந்த
    வண்டிப்பேட்டை.

63