இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
என்றொரு விளம்பரம் எங்கும் பரப்பினன்,
நன்றுறும் உலக நாத பிள்ளை.
விளம்பரம் கண்டதும் விருசுக் கலைக்டர்
“வளம்பெறச் சொல்லுவர் வாசலைப் பூட்டிச்
சொல்லுவ எழுதலும் தொலைந்ததே” என்று
சொல்லிய ஆர்டரைத் தொலைத்துப் பின்னர்
அவனைக் கண்டிட அன்பொடு வருகென
அவனொரு கடிதம் அனுப்பினன் சிலர்க்கு.
நானும் ஒருவனா நண்ணினேன். நிகழ்ந்தன
தேனும் சீயும் சேர்ந்த தொக்கும்.
விளம்பரப் படிக்கும் விரும்பிய படிக்கும்
வளம்படப் பிரசங்கம் வார்த்தனன் சிவமே.
உத்தர வொழிந்ததால் ஊர்ப்பொது விடமெலாம்
சித்தப் படுத்தித் தினமும் சென்று
பிரசங்க மாரி பெய்தனன் நஞ்சிவம்
கரசிங்க மென்றிடக் கர்ச்சித்து நின்றே.
ஊரா ரெல்லாம் ஒருங்கு கூடினர்:
சீரார் சுதேசியம் சிறப்புற நாடினர்:
சுதேசியக் கப்பலும் சுகமா நடந்தது.
64