விபினர் விடுதலை விமரிசை.
எதோவொரு தினத்தில் இயம்பிய சிவம்தான்,
“வங்கதே சத்து மாணிறை [1]பாலர்
தங்கடுஞ் சிறையின் தவத்தினை முடித்து
வெளிவரும் தினத்தில் விமரிசை சிற்சில
கனிவொடு செய்யக் கருதி என்னொடு
பாலர் படத்தைப் பட்டணப் பிரவேசம்
சீலர் பலரொடு செய்யவும், அன்று
தரும வைத்திய சாலை யொன்றும்
தருமப் புத்தக சாலே யொன்றும்
பண்பொடு பேசப் பழகும் நமது
நண்பர் சேர்ந்து நவிலும் முறைகளைப்
பயிலத் தக்க [2]பள்ளி யொன்றும்,
“சுயராச் சியம்” எனச் சொலும்பத் திரிகையும்,
தோன்றிடச் செய்யவும் துணிந்துபத் திரிகை
தோன்றிடும் தினந்தான் தொடுத்து நின்றதால்,
நகருளா ரிடத்ததை நவின்றவர் ஒப்பம்
தகவொடு வாங்கல் சரிப்படா தாதலால்
பத்திரிகை வேண்டுவோர் பரிந்தவர் மனைமுன்
பத்திரிகைப் பெயரைப் பருக்க எழுதிடின்
கொடுத்தல் எளிதெனக் குறித்த இவற்றை
எடுத்துச் சொல்ல எண்ணி இனிமையா,
“பாலர் மீள்தினம் பாரும் மீள்தினம்
சீலர் யாவரும் சேர்வோம் அத்தினம்
65