பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

வெள்ளையரின் விடாத சூழ்ச்சி.




“உரைத்த தினத்தெம் முயிரெலாம் போக்கி
உரைத்த கொடியினை உயர்த்துவர்” என்றே
அத்தைச் செய்தபின் அவர்தினம் கூடி
“எத்தைச் செய்தியாம் இவரை அழிப்பேம்;
பிரசங்க சமையம் பெருஞ்சத்த மானால்
விரைவினிற் சுட்டவர் மேனியைத் தொலைக்கலாம்
என்றியாம் நினைத்தோம்! எதற்கும் அவரிடம்
ஒன்றும் தந்திலர்; உரங்கொடு நிற்கிறார்”
எனப்பல பேசி ஏங்கும் பொழுதவர்
மனப்படி செய்ய வந்தனன் [1]“ஆசு
ஜாயின்று மேஜிஸ்டிரட்டா என்னகர்.
காயிதம் தந்தெனைக் காண்க,வா” என்றனன்
உயிரனைய என்னண்பர் ஓட்டத்தில் வந்து “நின்
உயிரினை நீக்குதற் குபாயம் செய்துளன்;
காண்கநீ போகேல், காலையிற் கேட்டேம்:
வீண்கதை யென்றுநீ விளம்பலொழி” என்றார்.

  • “செயிரறு நண்பரே! செப்பிய கேட்டேன்.

உயிரினை நீக்கும் ஊழ்வலி வந்திடின்
நம்மால் தடுக்கவும் நண்ணுமோ? செல்லாது
சும்மா இருந்திடின் சுகமோ” என்று
புறப்பட்டேன் என்னுயிர் போன்ற [2]* மகாதேவன்
திறப்பட் டென்னுடன் சென்றனன் றுணையா.


  1. †ஆசு-மணியாச்சியில் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்துரை.
  2. *மகாதேவன் - ஸ்ரீ வைகுண்டம் வக்கீல் T. R. மகாதேவய்யர்.

67