பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

தொழிலாளர் வெற்றி.




மில்லின் ஏஜண்டு மிகவும் கெஞ்சிச்
சொல்லி யனுப்பிய [1]*சுப்பிர மணியன்பால்
அவரவர் சம்பளத் தரைப்பங் கதிகமா
அவரவர்க் கதுமுதல் அளிப்ப தாகவும்
ஞாயிறும், மற்ற நாட்களில் வெளியே
போயிருந் தருந்தற்குப் போதிய நேரமும்,
விடுதி யாக விடுவ தாகவும்,
நடுவில் அவசரம் நண்ணுறின் லீவு
கூலி யின்றிக் கொடுப்ப தாகவும்,
நாலைந்து நிபந்தனை நயமாப் பேசி
திரும்ப அனுப்பினேன்; திருத்தி யாட்களை
அரும்பல மதியவர்க் கன்பொடு சொல்லி,
மாலையில் விருசும் வக்கீல் சிலரும்
சாலவும் நெருங்கிச் சார்ந்தனர் என்னகர்.
குருசாமி பையன் கூப்பிட் டனுப்பி
வருநாள் புறப்பட்டு மாதம் இன்று
பம்பாய் சென்றிடப் பகர்ந்தான் அவனுடை
தம்பி மூலமாய்ச் சாற்றிப் பற்பல.
குருநாதன் சிவம்பால் கூறினேன் நிகழ்ந்ததை.
“ஒருநாளும் நீயதற் குடன்படேல்” என்றனர்.
அந்த வுரையினை ஐயற் கறைந்தேன்.
வந்தனர் எமனவர் மறுநாட் காலையில்
அறைந்ததைச் செய்குவாய், அன்றேல் பெருந்துயர்


  1. *மில்லாபீஸ் டைாக்டர்களில் ஒருவரும்
    ‘மில்லாபீஸ் பிள்ளை’
    என்று வழக்கப்படுபவருமான சுப்பிரமணிய பிள்ளை.

69