உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தரையினை இழந்தவர்ச் சார்பயன் " என்று
" விஞ்சுத் தீயோன் விடுத்த அவ் ஆர்டர்
நஞ்சினை யொத்தே நல்லோர் மனத்தை
வருத்திய தாகவும் மாண்பா லருக்குத்
திருத்திய வெல்லாம் செய்தல்பின் " என்றும்
தீர்மான மெழுதித் தீர்ந்தேன் குழுவினை
ஓர்மான மின்றி உயிரொடு வாழ்வேன்.
மறுதின மாகிய ** மார்ச்சு ஒன்பதில்
குறுகிய விஞ்சுமுன் கொக்குறை குளத்தில்
ஆஜரானேன், ஆர்டர்கள் கொண்ட
நேசர் சிவமொடும் நிகழ்த்திய பத்மனொடும்.
நியாயம் திறந்திடும் நிலைதனில் நின்று
தயாளம் வளர்த்திடும் சாது கணபதி
செப்பிய மகாதேவன் சிவராம கிருஷ்ணன்
ஒப்பம் பெற்றெமக் குதவியா நின்றனர்.
மதியம் திரும்ப வழக்கினை எடுப்பதாச்
சதியுரை விஞ்சு சாற்றிப் பின்னர்
"பாலர்கொண் டாட்டப் பண்புகள் இந்நகர்
சீலரும் நடாத்துவர் ; சேர்தல் அதனில்நீ
உசிதமோ அன்றோவென் றுன்னிச் செய் "யெனக்'
கசியும் மொழியிலென் காதில் ஓதினான்,
“நல்ல தங்ஙனம் நன்றா வுன்னியே
நல்லதைச் செய்கிறேன் நானிவண்" என்றேன்
மதியம் திரும்ப வழக்கினை எடுத்தான்.



  • தரையினை இழந்தவர் சொந்த நாட்டில் பரர்க் கடிமை செய்வோர்.
    • மார்ச்சு ஒன்பது , 9-8-1908.

1 சாது கணபதி நெல்லை வக்கீல் சாது கணபதி பந்துலு (இவர்
சமீபத்தில் காலம் சென்றார்.)

+மகாதேவன், சிவராம கிருஷ்ணன் - வக்கீல்கள்.

72