பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

குடும்ப வரலாறு.

 

தாளால் வருவன தக்கார்க் கீந்து
வேளாண்மை புரியும் வேளாண் குலத்தில்
திருவும் அன்பும் சிறக்கப் பெற்றுத்
[1]
தருவும் பின்னிடத் தக்க வகையில்
செல்வமும் கல்வியும் திரட்டி அளித்த
கல்விச் சிதம்பரக் கவிஞன் பெற்ற
தக்க திறமையும் தகுதியும் வாய்ந்த
மக்களுள் மூத்தோன் வள்ளியப்பன்,
[2]
மேனாட் கொண்டவள் மேதினி நீங்க
மீனாட்சி யம்மையை விரும்பி மணந்து,
குலத்தினை வளர்த்துக் குவலயம் நின்று
நலத்தினைப் புரிய நல்கினன் ஐவரை.
மூத்தோன் சிதம்பரம் முன்னூற் பொருள்களைக்
காத்தோன் என்னக் கரையில கற்றுத்
தகுதியும் வாய்மையும் தண்மையும் தாங்கி
மிகுதி களைய விளம்பும் வக்கிலாய்,
நீதி புரிந்து நீள் புகழ் செய்து,
ஆதி பகவன் அடியினை சார்ந்து
நலத்தினைத் துய்க்க [3]நாலேழ் வயதில்
[4]நிலத்தினைத் துறந்து நீங்கினன் மன்னோ!
பின்னவன் என்னைப் பெற்ற மன்னவன்,
முன்னவன் , நிலைதனில் முறைமையிற் சென்று


  1. தரு - கற்பகவிருட்சம்.
  2. மேல்நாள் கொண்டவன் - முன்னாளில் மணந்த முதல் மனைவி.
  3. நாலேழ் - இருபத்தி எட்டு,
  4. நிலை - (வக்கில்) உத்தியோகம்,

3