உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைக் கனியமுது!
4


நன்றென மொழிந்து நானகம் புகவெதிர்
நின்ற என் முதல்மகன், 'நேற்றெனை விட்டுநீ
பிரிந்தனை யன்றோ? பேசேல்!" என்றான்.

  • பரிந்தெனைப் பொறுப்பாய், பாலா " என்றேன்.

இன்று நீ கொண்டெனை ஏகுவ தாக
ஒன்று மொழிந்தால் உன்னிடம் வருவேன்"
எனப்புகன் றோடினான். எடுத்தேன் ; முத்தினேன் !
மனப்படி செய்வதா வாக்கும் அளித்தேன்.
உண்டேன் அவனுடன் ; ஒளித்துப்பின் சென்றேன்,
கண்டேன் பாலரின் கருணை வடிவினை.
வணங்கினேன் ; அன்பர்கள் வரிசைகள் செய்தனர்.
இணங்கினேன் சிலருடன் ஏகினேன் விஞ்சுமுன்
இன்ஸ்பெக்டர் பை இரண்டொன்று கேட்டு
வன்புரை வாக்கால். " வாயுதா நாளை"
எனவுரை செய்யவும் எய்தினேன் என்னகர்
சினவுரை பெற்றிடச் செப்பிய மகன்பால்.
பொய்யன்' என்றான், 'போபோ' என்றான்.
மெய்யன் என்றுனை வேண்டினேன் வாக்கினை'
எனசில மொழிந்தான் : எடுத்தேன் ; அடித்தான்,
மனமகிழ் உடனவை மாண்புறப் பெற்றேன்.
பின்னாள் அவனோடு பேசிய விஞ்சுமுன்
மன்னா நின்றேன். வழக்கினை எடுக்குமுன்
75


75