பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோர்ட்டுக்குள்ளே 'வந்தேமாதரம்!'

எதிரே பார்த்தான் எதிர்த்த சுவரினில் கதிரே எனுமவன் கண்ணாற் கண்டான் "வந்தே மாதரம்" வார்த்தைகள் தம்மை. "அந்தோ! அந்தோ! அழி! அழி! என்றான். விரைந்தின் ஸ்பெக்டரை வினவினான். அவன் தன் கரந்தனில் ஏதோ காயிதம் வைத்து வாசித் தான் அதை மறுத்தேன்; பார்த்தான். வாசித்தேன் சட்டம்; மயங்கி விழித்தான். மறுநாள் வரும்படி வாயுதாச் சொன்னான் தெறுவாள் போன்ற சினந்த முகத்தொடு வாசல் கடந்தேன். வந்தே மாதரம்" பூசல் எங்கும் பொங்கி எழுந்தது! மிரண்டேன் என்ன விளையுமோ என்று திரண்ட பலரைத் தெருவினிற் கண்டேன். விஞ்சு வந்தால் வீண்போ ராகுமென் றஞ்சி அவரை அழைத்துத் திருப்பி குறுக்கு வழியைக் கூடி நடந்து வெறுக்க வெறுக்க விளையுளை நல்கும் தாம்பிர வருணித் தண்ணீர் கடந்து தீம்பல பேசிச் செறிவுற விருந்தேம் “சுதேசியம் கொஞ்சம் சொல்லுக" என்றனர் "அதேஜயம் கொடுப்ப"தென் றறைந்தேன்

                  [சிலசொல்.

பின்னர் நடந்தேன் பேணிய

  • சாதுபால்


•சாது-சாது கணபதி பந்துலு.

76


76