பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

உணவு கொடுத்தற்காகச் சிறை.


சண்முக சுந்தரம் சாற்றிய படிக்கங்
கன்பொடு நின்றநம் அரிகர புத்திரன்
கொடுத்தனன் உணவு கொஞ்சநாள்.அதனைத்
தடுத்திட அவனைத் தள்ளினன் சிறையுள்
நாளைக் கழித்திட நாய்த்தொழில் புரியும்
பாளையங் கோட்டைப் பாவி இன்ஸ்பெக்டர்.
சிலநா ழிகைக்குள் திருமந் திரம்நின்று
பலநாள் எனக்குப் பண்பொடு நின்று
நன்றி புரிந்து நானுளம் கொண்டிட
இன்றுமென் மக்களை இயல்பொடு புரக்கும்
குலமொடு நலமுயர் குலமகள் ஒருத்தியும்
குலமது வளர்க்கநான் கொண்டநன் மனையுமென்
மக்களொடு வந்துநம் மாண்ட சண்முகன்
தக்க மனையைச் சார்ந்தவண் நின்று
பலபல வுணவும் பாலும் பழமும்
பலபல பண்டமும் பதத்துடன் அனுப்பினர்.
என்னுடை மைத்துனன் இளையவன் *பிச்சன்
நன்னய முடனவை நாளும் கொணர்ந்தான்
மணமக ராக மதித்தெமை அங்கண்
மணமொடும் சுவையொடும் வள னுற வுண்டேம்.

 

  • மிச்சன்- நூலாசிரியர் மைத்துனர் பிச்சையா பின்ளை.

87