பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறையில் செய்த சீர்திருத்தம்


அடித்து வருத்தினர். அவரை வருத்தியாம் இடித்துக் கூறினேம். இறுத்தனர் அச்செயல். மந்திர நகரில் வரைந்த வெள்ளியில் வந்த கலகத்தின் மறுதினம் பலரைப் பிடித்துத் தண்டித்தும் பின் விசா ரணையென்றும் அடுத்தடுத் தனுப்ப அனேகரெமைச் சார்ந்தனர். தச்ச நல்லூரினும் சாற்றிய நெல்லையினும் வைத்தனர் தீயென வரையிலா தென்கரைக் கொணர்ந்தனர். நாங்கள் கூடிய வழிகளில் உணர்ந்தேம் நிகழ்ந்தன. உவப்புடன் அந்நாள் சாது கணபதி தலத்து ஜட்ஜிபால் ஓதினன் ஜாமீனுக் குரையினும் வரையினும் அவனும் மறுத்தனன். அதன் பின் என்னிடம் இவனும் வந்தனன் : இன்புறப் பேசினன் சென்னை சென்றனன் சிநேகிதர் சிலருடன் நன்னய வுரையில் நல்கினன் மனுவைப் பெரியஜக் கோர்ட்டில் பேசத் தகுந்த பெரிய வொரு வக்கிலைப் பேணி அமர்த்தி வெள்ளிக் கிழமை விரிவு றப் பேசித் தெள்ளிய ஜட்ஜிபால் சிறையினின் றெம்மை விரைந்து ஜாமினில் விடும் படி யாக வரைந்தால் ஆர்டரை வாங்கி அனுப்பினார். திங்கட் கிழமை செஷன்ஸ் ஜட்ஜ்முன் எங்கள் வக்கில் ஈந்தனர் ஜாமீன், உடனெனை விடும்படி உத்தர வடுத்தது. உடனதை இயம்பா தொளித்தனர் சிறையினர்.