முடிசூடா மன்னர்கள்
பதினொரு மணிக்குப் * பர்தர் ரிமாவ்டு
விதியினைப் பெற்றிட விஞ்சுமுன் சென்றேம்.
சென்ற வழிகொண்ட சிறப்புகள் பற்பல
அன் றவை கொண்டுயாம் அரசெனல் உணர்ந்தேம்.
குடுகுடென் றோடும் குதிரைகள் பூட்டிய
நெடுமிரு வண்டிகள் சேர்ந்தனர் எமக்கு.
நானொரு வண்டியை நண்ணினேன். நண்பர்
தாமொரு வண்டியைச் சாந்தனர். முன்பின்
உடலினைக் காக்கும் உத்தியோ கஸ்தர்
திடமுள நால்வர் சிறப்புற இருந்தனர்.
முன்பிரு டிப்டி சூப்பரின் டெஸ்டுகள்.
பின்பறு இன்ஸ்பெக்டர் பெய்சிக்கிள் வண்டியில்
இடவல பக்கம் ஈராறு ஏட்டுகள்
நடையினிற் சூழ்ந்திட நாலிரு ரிவால்வர்
நாலைந்து வெடியொடு நகன்றன வண்டிகள் ;
நாலைந்து பாகம் நண்ணினேம் ரோட்டினை
ஜனங்கள் திரளாச் சார்ந்தவன் நின்று
மனங்கள் கலங்குற வந்தனை செய்தனர்.
பன்னிரு கான்ஸ்டபிள் பைனட் வெடியொடும்
முன்னொரு ஏட்டு முகந்தெரி வாளொடும்
தாயாராய் நின்று சலியூட்டுச் செய்தனர்
தாயா ராய் நாங்கள் சலியூட்டை ஏற்றேம்!
அப்படி யாக அடுத்தடுத்துக் கோர்ட்டுவரை
செப்பமொடு போலீஸ் சேனைகள் நின்று
- பர்தர்—Further. || பெய்சிக்கள் வண்டி-சைகிள் வண்டி.
94