பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு கோங்குமர மீதிருந்து கூவும் குயில்இனங்காள் தீங்குமர மீதிருந்து தீதுண்ணும் - ஆங்கு திறையுள்ளே பட்டுச் சிறுமையுறு கின்றேற் கறைவதென்னோ நீவிர் அடுத்து. யச [டும் காகாவென் றின்று கரைந்துருகும் காகமே ஆகாவென் தீயூழ் அழிந்தின்று - போகாதோ இன்பிற்கோர் எல்லைகண்டேன் இஞ்ஞான் றெனைவாட் துன்பிற்கோர் எல்லையின்றோ சொல். கடவுள் உண்மையை நாட்டல். அறிவாக எப்பொருட்கும் ஆதார மாகச் செறிவாக நிற்கின்ற தேவைப் - பொறிவாயில் மூலமாக் காணாத மொய்ம்பால் இலையென்று சாலமொழி கின்றார் தலத்து. க பொறிகாணா கப்பொருளும் பொய்யென்று கூறல் அறிவாமோ சத்திமனம் ஆன்மா - செறிவாக நம்முள் இருப்பதனை நாம்காண்கின் றோம்பொருள்கள் தம்முள் இருப்பதுமெய்ச் சத்து. 2 ஒருபொறி காணும் ஒருபுலனை மற்றிங் கொருபொறி காணாதாங் குள்ளம் - மருவும் நினைப்பைப் பொறிகாணா நேர் ஆன்மா காண்மெய் தனைப்பிற காணா தடுத்து Th மெய்பல் பொருள்களுளும் மேவியுன தென்றக்கால் மெய்பல் பொருள்களுக்கு வேறாகி- உய்தலுறும்