பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகமே புறம். இதனைப்பற்றிய சில புதிய மதிப்புரைகள் :-- அகமே புறம் என்னும் இந்நூல் மொழி பெயர்ப்பாள ராகிய ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் கைக்கலத் தால் முதனூலிலும் சிறந்து விளங்குகின்றதென ஐயமறக் கூறலாம். ஸ்ரீ மாக் பிள்ளையவர்கள் தமிழுலகத்திற்குப் புதிய சால்லர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர்கள் அடைந்துள்ள பாண்டித்தியத்தை அளவிட்டறிதற்கு இந்நூலே ஒரு சிறந்த அளவுகோலாம். முதனூலின் ஆழ்ந்த கருத்துக்களை சிறுவர் சிறுமியரும் எளிதிலுணர்ந்து கொள்ளத்தக்க எளிய தெள்ளிய செந்தமிழ் நடையில் விளக்குவித்த பிள்ளையவர்கள் திறமை யாவராலும் பெரிது மதிக்கற்பாலதேயாம். இவ்வரிய நூலைத் தமிழ் மக்களாவார் எவ்வொருவரும் வாங்கிப்படித்துப் பய தணர்வார்களாயின், தமிழுலகெங்கும் அறமுகில் பரந்து, அன்பு மழை பெய்து, இன்பப்பயிர் செழிக்கு மென்பதற்கு எட்டுணையும் ஐயமின்று. - தமிழன், திருவனந்தபுரம். " ஈகமும் துக்கமும், மகிழ்வும் நோவும், திடமும் அச்சி. மும், விருப்பும் வெறுப்பும், அறிவும் மடமையும் அகத்திலன்றி வேறு எங்கும் இல்லை, அவை யாவும் மனோ நிலைமைகளே யன்றி வேறல்ல என்று இந்நூலில் சொல்லப்பட்டிருப்பது போல அம்மனோ நிலைமைகளுக்கொத்தபடி வாழ்வும் அமைகின் றது என்பதை இந்நூல் விளக்குகின்றது. நிற்க. அறம், பொ ருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் சுவபமாக அடை தற்குத் தக்க மார்க்கங்கள் இதில் தெளிவாய் கூ.. றப்பட்டிருக் கின் நன. இதன் முதனூலாசிரியரின் கருத்துக் கிணங்கிய தமிழ் நூலாசிரியர்களின் முதுமொழிகள் இதில் சிற்சில விடங் களில் சேர்க்கப்பட்டிருக்கின் றன. மிஸ்டர் பிவ்ளை அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஒருவராயிருந்தும் தம்மு டைய வித்வ சாமர்த்தியத்தைக் காண்பிக்கவேண்டு மென்கிற அவாவில்லாமல் சாமானியப் படிப்பாளிகளும் வாசிக்கும்படி யான எளிய செந்தமிழ் நடையில் எழுதியிருக்கிறார். தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் இதை அவசியமாக வாங்கி வாசித்துப் பயனடைய வேண்டுமென்பதும்முடையவேண்டுகோள்.".-. சென்னை வியாபார், சென்னை.