பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமேபுறம்.

இது லௌகிக உந்தத நிலையையும் வைதிக உந்தத பத வியையும் சுலபமாக அடையச்செய்யும் மார்க்கங்களை வரிசை படுத்தித் தெளிவாகக் கூறுகின்றது. இதனைக் கற்றுணர்ந்து இதிற்கூறியுள்ள மார்க்கங்களில் ஒழுகுபவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் ஒருங்கே இம்மையில் அடை வரென்பது திண்ணம், இதுவரை தமிழில் வெளிவக் துள்ள வசன நூல்களுள் இதுபோல மனிதசமூகத்திற்கு இம் மை மறுமைப் பயன்களை அளிக்க வல்ல நூல் வேறொன்று மில்லை யென்பது நமது அபிப்பிராயம். இது தமிழ்மக்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கவேண்டுவது அவசியம்."வித்தியாபாது, மதுரை. " இதன் ஒவ்வொரு பக்கத்திலும், மனஸ்தத்துவங்களை அபிவிர்த்திசெய்து இகபர நன்மைகளைப் பெற்றுய்யும் வழி துலக்கமாக விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது. வித்தினின்று விருக்ஷமுண்டாவது போலவே, அகத்தில் மறைந்து கிடக்கும் கூறுகளே புறமாக வெளிப்படுகின்றன என்பதே இப்புத்தகத் தின் சித்தாந்தம், ஒருவருடைய சுகதுக்கமும், நன்மை தின் மையும், உயர்வு தாழ்வும் ஆதியில் அவனுடைய உட்புறமான ஆத்மாவினிடத்தே அமைந்து பிறகு வெளிப்புறமாகத் தோன்று கின் றமையால் ஒவ்வொருவரும் தமது உள்ளத்தைச் செம்மைப் படுத்திக்கொண்டு துக்கமென்னும் கடலுக்குத் தப்பி இம்மை மறுமை நலங்களை எய்துவதற்கு அவர்கள் இன்னின்ன சாத னங்களைக் கையாடவேண்டுமென்று தெளிவாசவும், ஸ்வாரஸ் யமாகவும் இப்புத்தகத்தில் எடுத்துக் காட்டியிருக்கின் றமை யால் தமிழறிந்த ஒவ்வொருவரும் இதை அகத்தியம் வாங்கிப் படித்துப் புருஷார்த்தங்களை யடையவேண்டுமென்று கருது கிறோம். இப்புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்த ஸ்ரீமாக சிதம்பரம்பிள்ளையவர்களுக்குத் தமிழுலகம் நன்றி செலுத்தக் கடன்பட்டிருக்கிறது.”- சுதேசபரிபாலினி, இரங்கோன். " இந்தப் புஸ்தகம், நம்மவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக வாசித்து, சிந்தித்து, அநுஷ்டானத்திற் கொள்ள வேண்டிய விஷயங்களை யடக்கி யிருப்பதுமன்றி சிறந்த தமிழில் எழுதப் பட்டும் நேர்த்தியான ஸ்வதேசியக் கைத்தொழில் முயற்சி யாலான காகிதங்களில் அழகான முத்துப்போன்ற அசுரங்க ளால் அச்சியற்றப் பெற்று முள்ளது."--பூரணசந்திரோத யம், மதுரை, xii