பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாடற்றிரட்டைப்பற்றிய அபிப்பிராயங்கள். 4, விலப்படுவன "நமது தேசாபிமானியாகிய ஸ்ரீமான் . உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் பல சமயங்களில் பாடிய பாடற்றிரட்டு மனி த சமூகத்திற்கு அவசியம் வேண்டுவனவாகிய ஈகை,ச உண்மை முதலியவைகளையும், ஊழின் வலிமை இத்துணைத் தென்பதையும், அவ்வூழையும் மெய்ம்முயற்சியினால் வென்று விடலாமென்பதையும், துன்ப மென்ட அனைத்தையும் இன்பமென்று நினைக்கின் அவை அக்கணமே இன்பமாக மாறிவிடுமென்பதையும், கடவுளையும் ஆன்மாவை யும் பற்றி மனிதர் அறியவேண்டிய அநேக விஷயங்களையும் இனிய தமிழ் நடையில் தெளிவாகக்கூறுகின்றது. இந்நூலை நமது நாட்டார் வாங்கி வாசித்து மேம்படவேண்டுமென்று யான் கோருகிறேன்.' சேஷாத்திரி அய்யங்கார், தமிழ்ப் பண்டிதர், பாதூர். 33 "நமது தேசாபிமானத் தலைவரும், மதுரைத்தமிழ்ச் சங் கப் புலவரும், பொதுமறையின் தற்கால உரையாசிரியருமா கிய ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்களது பாடற்றி ரட்டு நமது மதாச்சாரியர்களும் தமிழ்ப்பண்டிதர்களும் வாசிக் கத்தக்க பல அரிய விஷயங்களையும் ஒரு பெரிய நூலிற்குரிய பல சிறப்புக்களையும் கொண்டுள்ளது. இதனைத்தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் கைக்கொண்டு கற்கவேண்டுமென்பதும் இது நிலவுலகில் நீடுநின்று நிலவவேண்டுமென்பதும் எனது கோரி ஸ்ரீ சகஜாநந்த சுவாமியவர்கள், சென்னை. க்கை 112