பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம்.

ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம்பிள்ளையவர்கள் இராஜ நிந்தனைக் குற்றத்திற்காகச் சிட்சிக்கப்பட்ட காலத்தி ற்கு முன்னர் பாடிய தனிப்பாக்களும் அவர்கள் சிட்சிக் கப்பட்டுக் கோயமுத்தூர் சிறையில், வசித்தகாலத்தி லும் கண்ணனூர் சிறையில் வசித்தகாலத்திலும் பாடிய தனிப்பாக்களும் இப்பாடற்றிரட்டில் அடங்கியிருக் கின்றன.) இதிலுள்ள பாக்களிற் பெரும்பாலன வெண்பாக் கள். மற்றவை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை முதலியன. இப்பாக்கள் இனிய செந்தமிழில் இயற் றப்பட்டுள்ளன, சங்கீத ஞானம் சிறிதும் தமக்கு இல்லை யெனச் சொல்லாநின்ற பிள்ளையவர்கள் இப்பாக் களைப்பாடியது ஒரு வித்தகச் செயலென்றே சொல்ல வேண்டும். இந்நூ லிலுள்ள ஈகை, அன்பு, உண்மை முத லிய ஒழுக்கப் பாக்களும் பதிபசுச்செயல்கள், கடவுள் உண்மை , கடவுளுக்குக் காவல்தொழிலை அளித்தல் முதலிய ஞானப் பாக்களும் படிக்கப்படிக்க மிகுந்த சந்தோஷத்தை விளைக்கின்றன. ஸ்ரீமான் பிள்ளையவர் களும் அவர்களது நூல்களும் பிறவும் நீடூழி நின்று வாழ்க. சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.) நிரதிசய-பாலசுந்தர ஆனந்த தைமீ யருக, சுவாமி.