பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடற்றிரட்டு

ஈயுமவை மண்பெண்பொ னெல்லாமா மாதலினான்
மாயு மவற்றினபி மானமெலா - மாயமன
மாசொழிந்த வாடியைப்போன் மாறாது மெய்காட்டித்
தேசொளிருஞ் சின்மயமாந் தேர். ரு

யாவர்க்கு மீதலினால் யாரிடத்து மன்புண்டாம்
யாவர்க்கு மாதார மான்மாவே - யாவதினா
லான்மாவை நேசித்த தாமதனா லம்மனந்தா
னான்மாவே யாகு மறி.

இக்கா ரணம்பற்றி யீதலின்வீ டெய்துமென்றா
ரிக்கா ரணமதனை யெண்ணாம- லெக்காலுங்
கீர்த்தியையே நாடிக் கிளர்விலையை நல்குதல்போற்
பேர்த்தெதனை பீயினுமென் பேறு.

ஓர்பயனு மோர்மாற்று முன்னா துதவுவரேற்
சார்வினைக ளில்லென்ப தக்கோர்கள் - சார்வினைக்
ணீங்கிடவா காமியமு நீங்குமதன் மேற்பிறப்பு
மேங்கியொழி யுங்காண்பா யீங்கு.

ஆனதொரு சஞ்சிதந்தா னாகா மியமொழியப்
போனவழி தோன்றாது போயொழியு - மேனெனினீ
யெத்தனைதான் செல்வ மிருப்பினுமேற் றேடாயே
லத்தனையும் போம்போ மறி.

பல்லோர்க்கு மீதலினாற் பற்றொழிந்து மன்புதித்தும்
பொல்லா வினையிரண்டும் போ யொழிந்து - நல்லறிவால்
வல்லார்சேர் முத்திபெற்று வன்பிறப்பி னீங்குதலா
வில்லார்க் கிரங்கியுட னீ.

4