பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு.

ஏவரையுந் தன்னுயிரென் றெண்ணிநள்ள லன்பன்றிச்
சாவரையு நேசிக்குந் தாய்தந்தை - மேவரிய
பெண்டுபிள்ளைசுற்றங்கள்பேணுபொருடம்மைமட்டுங்
கண்டுநள்ள லன்பன்று காண்.

யாவரையுந் தன்னுயிரென் றாதரித்த லன்பாகுந்
தேவரையு ஞானியையுஞ் சீலகுண -மூலரையு
மாதரித்தல் பத்தியா மன்னை தந்தை யாதியரை
யாதரித்தல் பாசமேயாம்.

ஆதரித்த னன்றே யறவோரை யாதரித்தல்
தீதிழைக்கும் பாவிகளைத் தீதேயாந்- தீதிழைக்கும்
பாவிகளை யெந்நாளும் பல்விதத்திற் றண்டித்து
மாவிகளைந் தும்வாழ்த லன்பு .

பாசமதிற் பத்தியதிற் பண்புமிக்க தன்பறிக்
பாசமது மேன்மேலும் பந்தநல்கு - மாசுகஞ்சேர்
பத்தியதோ வன்பிலொரு பாகந்தா னாதலினான்
முத்திபெற வன்பே முதல்.

ஏவருமே தன்னுயிரென் றெண்ணியன்பு பாராட்டின்
யாவருமே தன்னுயிரே யாயிடுவர் - மேவருந்தன்
பக்கமதி லன்னியத்தைப் பாரான்பி னிவ்வுலகிற்
றுக்கமது முண்டோ சொலாய்.

அன்னியத்தை யாருயிரென் றாதரிக்கச் சீவனெனுந்
தன்னிலுளபற்றொழியுஞ்சாற்றினனாற் - றன்னினுள
பற்றொழிய நெஞ்சத்துப் பாசமல நீங்குமுண்மெய்
முற்றுவிளங் கும்பின் முனைத்து.

5