பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை

நன்மையினை யாக்குவது நல்லின்ப நல்குவதும்
புன்மையினைப்போக்குவதும்பூதலத்தில் வன்மையுட
னுள்ளதையே சொல்லுவதுமுண்மையென்பநீதிமுறை
யுள்ள கலை பற்பலவு மோர்ந்து.

மெய்யுரைக்கப் பெற்றிடுவன்மிக்கவறஞ் செல்வமின்ப
மையறுக்கு ஞானநெறி மாண்வீடு-- பொய்யுரைக்கச்
சொல்லியவெல் லாமொழியத் தொன்னரகில் வீழ்வனெனச்
சொல்லினரே யான்றோர் தொகுத்து.

காதல் கவறாடல் கள்ளுண்டல் நற்பொருட்குச்
சேதம் விளைக்குந் திரிபடைக - டீதுறுமிம்
முச்செயலுமெய்யுரைக்க முன்னொழியும் பின்பெருகு
நிச்சலுமா ணல்கு நிதி.

பொன்வளரக் கல்விமிகும் புத்திமிகும் பண்டிதரு
நன்மறைய ரும்வந்து நள்ளுவர்காண் - பின்வளரு
நல்லவறம் நல்லின்பம் ஞானமிவற் றாற்பெறுவ
னல்லலிலா மெய்வீடறி. ரு

எண்ணுவதும் பேசுவது மெப்பொழுது மெய்யென்றா
னண்ணுவது நல்லின்ப நம்மனத்தி - லெண்ணுவதும்
பேசுவதும் பொய்யென்றாற் பின்பதனைநாட்டிடச்செய்
யோசனையாற் றுன்பானி யுண்டு.

என்றென்று முள்ளதுவா யின்பமய மாயறிவா
யென்றென்று மொன்றெனவே யெவ்விடத்து - நின்றொளிரும்
வத்துவொன்றே மெய்யென்றார் மற்றவெலாம் பொய்யென்றா
ரத்துவித நூலுணர்ந்தோ ராய்ந்து.

7