பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடற்றிரட்டு

மெய்யுரைக்க மெய்யாகி வீட்டின்ப மேவிடுவன்
பொய்யுரைக்கப் பொய்யாகிப் புன்னரகை - யெய்தியுள
துக்கமொன்றே மேன்மேலுந் துய்த்துழல்வன் றன்னுடைய
பக்கநின்றா ரெள்ளிடத்தான் பார்த்து.

ஓரிடமு மில்லெனவு மோருருவு மில்லெனவுந்
தேரிடமு மில்லெனவுந் தேர்ந்தாலு- மோரறிவா
யுள்ளவொன்றை யுன்னுதலா லுள்ளமெனச் செப்புவரே
கள்ளமனத் தின்செயலைக் கண்டு.

உள்ளதொன்றை யென்று முரைத்திடவு முன்னிடவு
முள்ளிநின்ற செல்வ மொடுவீடு- மெள்ளநின்ற
வுண்மையல வற்றை யுரைக்கநர கும்பெறலி
னுண்மைதனை யென்று முரை

தமது முதல் மனைவி சிவபதமடைந்தபோது சொல்லிய
பாக்கள்.மகராசி யென்றழைக்கும் வள்ளியம்மா ளுன்னன்
முகராசி யென்கண்மு னிற்க - மிகராசி
யாயெனக்கு மென்னவர்க்கு யார்க்கு நடந்து நின்று
போயதுவா னென்னோ புகல்.

உன்னைக்கண் டுன்செயலை யுன்னிநனி யெஞ்ஞான்று
மென்னியல்யான் முற்றுமறந் திங்கிருக்க - நன்னயமா
வாழ்ந்திடவே போந்தனையோ வானூர்நன் னூலிழுக்கி
வீழ்ந்தவனென் றென்னையிவண் விட்டு.

8