பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடற்றிரட்டு


வ.சண்முகம்பிள்ளையவர்கள் சிவபதம் அடைந்த
போது சொல்லிய பாக்கள். (6-9-04)

என்னுயிருக் கின்னுடலா யென்னுடனென் றுங்கலந்திங்
கென்னுடலை யின்னுயிரா யீங்கியக்கி - மன்னி
யிருந்தநண்ப சண்முகநீ யீங்கென்னை நீங்க
வருந்துயரெங் ஙன்புகல்வன் மற்று.

தானேதா னாகிநிற்குஞ் சாமிவள்ளி நாயகனைத்
தானேதா னென்றணவுஞ் சண்முகனே- மானார்
விழிழயக்க மெய்தாத மேலோய்கொண் டானோ
விழியிலவ னின்னை விளம்பு.

சாதுக்கள் தங்குதற்குத் தன்னகத்தைத் தந்தவர்தங்
காதுக்கெஞ்ஞான்றுமே கையாத - வேத
வுணவுதவு நண்பநின துத்தமமா வோங்குங்
குணமதையுங் கொள்ளுவனோ கூற்று.

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜப்பெருமானைத் தரிசித்தபோது
சொல்லிய பா.(11-9-04)


நடராச னம்பெருமா னாமாகி நின்றான்
திடராச யோகியுமாய்த் தீர்ந்தான் - வடவாலின்
தண்ணிழலில் வீற்றிருந்து தன்னியல்பைப் போதித்தான்
நண்ணிடவே முத்தியினை நாம்.

சேத்தூர் ஸ்ரீ இராமசுவாமிக்கவிராய ரவர்களுக்கு
எழுதிய பாக்கள்.(14-9-04)


கல்விக்கு நாயகமே கற்பகமே மாதுலநின்
செல்விக்கு முன்கிடைத்த தீர்ப்பினது - செல்வத்தை
வாங்கியளி யாத மறப்பதனா னின்கடிதந்
தாங்கியுயர் வுற்றேன் றனித்து.

12