பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பலபொருட் பாக்கள்

நின்கடிதங்கண்டுவந்து நின்னெழுத்தைக் கண்ணொத்தி
நின்கவியை யுட்கொண்டே னேரிங்கு - நன்கினிக்குங்
கண்டென்றா லஃதடரின் கைக்குமமு தச்சுவைதா
னுண்டென்றால் வன்பகையங் குண்டு.

ஈடுற்ற நின்கவிக ளென்னுளத்தைக் கொண்டவின்றேகிங்
பீடுற்ற கட்டளையைப் பெற்றெதிரி - வீடுற்று
நற்பொருளைக் கொண்டளிப்பே னானினது புத்திரிக்
கற்பமுமேற் றாமதமில் லாது.

சிரஞ்சீவி உலகநாதனைத் தொட்டிலில் இட்டபோது
பாடிய பா.(23-10-04)



சிற்பொருளைத் தெய்வமெனத் தேர்ந்துணரு மென் குழந்தாய்
சிற்பொருளைச் சிந்தித்துச்சீருறநீ கண்வளராய்.

தமது மனைவியார் தமது புதல்வனுக்கு மருந்து கொடுக்க
வேண்டு மென்றபோது கடவுளை வினாவிய பா.
(24-10-04)



கடவுளரே நுங்கருணை காட்டாது நின்றாற்
றிடமுடனாம் வாழ்வதெங்ஙன் செப்பீர் - மடமனையா
ளன்புகொண்ட புத்திரனுக் காமவிழ்த நல்கவென்று
துன்புறுத்து கின்றா டொழுது.

கடவுள் சொல்லிய விடையாகப் பாடிய பா.

அன்புடைய மைந்தா வறியாது சொற்றனைநீ
துன்பின்பு நல்குவது தொல்கரும - மென்பதுமெய்
யானாலுந் தொன்னூ லறைந்தபடி நோய்க்கவிழ்த
நானாகி னுங்கொள்ள னன்று.

13