பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம்.

எனது தனிப்பாடல்களில்,.. முந்நூற்றைம்பது "வெண்பாக்களும், ஒருதாலாட்டும், மூன்று விருத்தங்க -ளும், பதினைந்து' கட்டளைக் கலித்துறைகளும், நானா ற்று நாற்பத்து மூன்று வரிகள் கொண்ட பதினொரு நிலமண்டல ஆசிரியப்பாக்களும் இப்புத்தகத்தில் அட உங்கியிருக்கின்றன. யான் இராஜநிந்தனைக் குற்றத்திற “காகச் சிறைக்கு அனுப்பப் பட்டதற்குமுன் யான் பாடிய பாக்களில் தொண்ணூற்றேழு இதன் முதற் பாகமாகவும் யான் சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாக்களில் இருநூற்றெண்பத்து நான்கு இதன் இரண் டாம் பாகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக் கண இலக்கியப் பயிற்சி இல்லாதாரும் எனது பாக்க ளின் பொருள்களை இனிது உணருமாறு எனது பாக்க ளில் ஆங்காங்குக் காணப்படுகிற அரும்பதங்களுக்கு உரைகள் எழுதி இதன் முடிவில் சேர்த்துள்ளேன். -இப்புத்தகத்திலுள்ள முந்நூற்றெண்பது பாக்க "ளில் ஏறக்குறைய ஒருநூறு கடவுளைப்பற்றிக் கூறு வன் ; மற்றொரு நூறு ஒழுக்கம் முதலியவற்றைப்பற் றிக் கூறுவன ; மீத நூற்றெண்பதும் எனது சுற்றத்தார் களுக்கும் நண்பர்களுக்கும் யான் எழுதியவை. இப் பாக்கள் யான் என்ன சமயத்தைச் சேர்ந்தவனென்ப தையும், எனது மனம் எதனை முதன்மையாகப்பற்றி