பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிமன் சி. முத்துசுவாமிப்பிள்ளையின் பிணிநீங்கத் திருமாலை வேண்டிப் பாடிய பாக்கள்.


அறிவா லறியு மனைத்துமா நின்றென்
னறிவா யமைந்த வரியே -- சிறியேன்
மனமென்றும் பற்றிநிற்கு மைத்துனனோய் தீர்த்துத்
தினமின்பம் பெற்றிருக்கச் செய்.

அன்பே முதிர்ந்த வருளென்ப வவ்வருளை
யுன்பே ருருவாக வுற்றிருந்து - மென்பே
ரிதயத்து ணிற்கின்ற வென்மைத்து னற்குன்
னிதயத்தை யீயாத தென்.

அறமுழுதுங் காக்க வருள்புரிந்தெஞ் ஞான்று
மறமுழுதும் வேரறுக்கு மாலே - திறமுழுது
மென்னுரிய மைத்துனற்கிங் கீந்தருள்வாய் நோயகற்றி
யுன்னுரிய வன்பா லுவந்து.

பூவளிக்கும் நின்கை பொருளளிக்கு நின்மனைவி
பாவளிக்கு நின்மருகி பல்பிறப்புன் - சேயளிக்கு
நின்மைத்து னன்வீடு நேயமொடு தானளிப்ப
னென்மைத்து னற்களிப்பா யின்பு.

நல்லவரைத் துன்ப நணுகுங்காற் காப்பலெனச்
சொல்லியதைப் பின்பற்றித் தொன்றுதொட்டு- நல்லவரை
யெத்தினமுங் காத்தருளு மீசா வெனது நல்ல
மைத்துனனைக் காப்பாய் மகிழ்ந்து.

15