பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாக்கள்


முகவையூர் ஸ்ரீ இராமசுவாமிக்கவிராயரவர்களுக்கு
எழுதிய பா.
நற்றவத்தர் முத்தேவர் நற்குரவர் தாமென்றும்
பெற்றவற்றை யேயளிப்பர்பேரருளாற் - பெற்றபெறா
வெல்லாநின் பொற்கவியா லென்றுமளிக்குங்கரத்தாய்
நல்குககுற் றாலபுராணம்.

குறுக்குச் சாலையிற் பாடிய பா.
திருவள் ளுவனென்னுந் தெய்வீக வாசா
னருளுள்ளி யென்றென்று மன்பை - யொருநற்
பொருளென்னக் கொண்டு பொருளுண்மை கண்டு
தெருளுன்னி வாழ்வேன் றினம்.
பேட்டைக் கணபதி கோயிலிற் பாடிய பா.
ஆயபழம் பேட்டை யனவா த சுந்தரவி
நாயகரே யெஞ்ஞான்று நன்றுறுநுந் - தூய
வடியிணை சார வருள்புரிந் தெங்கள்
மடியினைத் தீர்ப்பீர் மகிழ்ந்து.
மெய்ப்பொருளை நோக்கிப் பாடிய பா.
எங்குநிறைமெய்ப்பொருளேயெல்லார் தந்நெஞ்சுள்ளுந்
குபர சின்மயமே தந்தருள்வா-யிங்கெனது
நாட்டிலுளார் தீதொழித்து நன்றியற்றி மேன்மையுற்
வீட்டிலுறு நல்ல விதி.
19